பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்வுகளை தமிழகம் மெல்ல மறந்து வரும் நிலையில் கவின், லாஸ்லியாவின் காதல் பஞ்சாயத்துகள் மட்டும் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. அவர்கள் இருவரும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மிக சீரியஸாகக் காதலித்து வருவதாகவும் அடுத்த ஆண்டு இருவரு திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் முடிந்த உடனே கட்டி அணைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினும் லாஸ்லியாவும் பரஸ்பரம் தங்கள் பொழப்பைப் பார்க்கக் கிளம்பிவிட்ட நிலையில் பிக்பாஸ் நாடகக் காட்சிகளில் இவர்கள் காதல் காதல் காட்சிகளும் அடக்கம் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், கவினும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கும், பேசிக் கொள்ளாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம்.

யெஸ், லொஸ்லியாவின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய அவருடைய அப்பா, முக்கியமான கண்டிஷன் ஒன்றையும் போட்டாராம். அதாவது, ஒரு வருடத்திற்கு கவினும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலும், பேசிக் கொள்ளாமலும் இருக்க வேண்டும். அதன் பிறகும், லொஸ்லியாவுக்கு கவின் மீதும், கவினுக்கு லொஸ்லியா மீதும் காதல் இருந்தால், காதலை தொடரலாமாம், அதற்கு எந்த தடையும் போட மாட்டார், என்பது தான் அந்த கண்டிஷனாம். அப்பாவின் கண்டிஷனை ஏற்றுக் கொண்ட லொஸ்லியா, தனது காதலின் வீரியத்தை உணர்த்துவதற்காக, தற்போது கவினுடன் பேசாமல் இருக்கிறாராம். கவினும் அதனால் தான் லொஸ்லியாவிடம் இருந்து ஒதுங்கியிருக்கிறாராம்.