பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, இந்த சீசனுக்கான ஆர்மி துவங்க பிள்ளையார் சுழி போட்டவர் இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா எனலாம்.  இவர் உள்ளே வந்த இரண்டாவது நாளே, இவருக்கு ஆர்மி துவங்கி அதிர்ச்சி கொடுத்தனர் சில ரசிகர்கள்.

இவர் சேஃப் கேம் விளையாடுவதாக சிலர் கூறி வந்தாலும், புறம் பேசுதல், மற்றும் சண்டை போடாமல் நிதானமாக விளையாடுவதால் இவருக்கு பலர் சப்போர்ட் செய்தும் வருகிறார்கள்.  அதே போல் அவ்வப்போது இவர்  பாடும் பாடல், மற்றும் டான்ஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் இவரை பற்றி பேசியுள்ள பிரபல நடன இயக்குனர் கலா,  லாஸ்லியாவின் சின்ன சின்ன அங்க அசைவுகளும் அழகாக இருக்கிறது. கண் சிமட்டுவது பலரையும் ஈர்க்கிறது. நடனம் நன்றாக ஆடுகிறார்.

எனவே ஒரு ஹீரோயின் ஆவதற்கான அனைத்து அம்சங்களும் இவரிடம் உள்ளது. அவருக்கு வாய்ப்புகளும் வரும். லாஸ்லியா ஆர்மி பிக்பாஸ்க்கும் மட்டும் ஆதரவு கொடுப்பதோடு இருந்து விடாமல் வாழ்க்கையிலும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.