மோஷன் போஸ்டரில் செம்ம கெத்தாக இடையில் கைவைத்து நிற்கும் லாஸ்லியா தான் முதலில் தோன்றுகிறார். 


இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ, அதேபோல் லாஸ்லியாவிற்கும் ஆர்மிகள் தூள் பறந்தது. அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக நாயகன் கமல் ஹாசன் வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே அவர்களது ரசிகர்கள் பட்டாளத்திற்கு மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.

இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் தவம் கிடந்தனர். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக லாஸ்லியா முதன் முதலில் “பிரெண்ட்ஷிப்” என்ற படத்தில் கமிட்டானார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் ஒருநாள், அக்னி தேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கத்தில் “பிரெண்ட்ஷிப்” படம் தயாராகிறது. மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

Scroll to load tweet…

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த கதை முழுக்க கல்லூரி நட்பு சம்பந்தப்பட்டது என்பதால் காலேஜ் கிளாஸ் ரூம், நூலகத்தில் மாணவர்கள் படிப்பது போன்ற காட்சிகள் மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. மோஷன் போஸ்டரில் செம்ம கெத்தாக இடையில் கைவைத்து நிற்கும் லாஸ்லியா தான் முதலில் தோன்றுகிறார். அதன் பின்னர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஹர்பஜன் சிங் ஆகியோர் காண்பிக்கப்படுகின்றனர். லாஸ்லியாவின் ஹீரோயின் தரிசனத்தை பார்த்து உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்