பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், லாஸ்லியாவின் தந்தை உள்ளே வரும் காட்சிகள் காட்டப்பட்டது. பத்து வருடமாக, தன்னுடைய தந்தையை பார்க்காமல் இருக்கும் லாஸ்லியா, தந்தையை பார்த்ததும் கட்டி அணைத்து அழுது, காலில் விழுந்த காட்சிகள் பார்ப்பவர்கள் மனதையே மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் உள்ளே வந்த தந்தை, லாஸ்லியாவை அன்பான வார்த்தைகள் சொல்லி, அவர் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் லாஸ்லியாவை கண்டமேனிக்கு திட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் லாஸ்லியாவிற்கு, நடிகர் கவின் மேல் உண்டான  காதலாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கும் என தெரிகிறது. கவின் ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான, சாக்ஷியை ஆரம்பத்தில் காதலிப்பதாக கூறி விட்டு பின், லாஸ்லியாவிடம் பழக துவங்கியதும், சாக்ஷியை கண்டுகொள்ளவில்லை. தற்போது, சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதால். கவின் மற்றும் லாஸ்லியா காதல் பறவையாக சுதந்திரமாக பிக்பாஸ் வீட்டை வட்டமிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ லாஸ்லியாவின் தந்தை மனதில் என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியில் அடுத்தவங்க என்ன காரி துப்புரதை பார்க்க தான் உள்ள வந்தியா? என மிகவும் கோவமாக லாஸ்லியாவை திட்டுகிறார். பின் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வெளியே வா என கூறுகிறார்.  சேரன் லாஸ்லியாவின் தந்தையை சமாதானம் செய்ய முயற்சித்தும் அது எந்த அளவிற்கு பலன் அளித்தது என்பது தெரியவில்லை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும்.