லாஸ்லியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜய் டிவி நிர்வாகம், லாஸ்லியாவை ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம்,அதாவது லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க இருந்த தகவலை ஏற்கனவே ஏசியாநெட் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம், அது தற்போது வெளியான ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில், நேற்று கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சேரன் ரகசிய அறையில் இருந்து கவினுக்கு சேரன் கடிதம் அனுப்பியதும் , பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, அடுத்ததாக கவின் மற்றும் லாஸ்லியாவை மனதை மாற்றும் முயற்சியில் இறங்கும் அந்த சீனில் முடிந்தது. 

இந்த நிலையில் ரசிகர்களின் ஃ பேவரைட் லிஸ்டில் இருக்கும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசனை லாசலியாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்து சில நிமிடங்களில், ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் ஒலிக்கப்பட லாஸ்லியா கதறி அழ தொடங்குகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின் தந்தை வருகிறார். அவரை கண்ட லாஸ்லியா காலில் விழுந்து கதறி அழுகிறார். கடந்த 10 வருஷமா பார்க்காமலிருந்த தனது தந்தையைப் லாஸ்லியாவுக்கு ஃப்ரீஸ்  டாஸ்கில் அழைத்துவந்து காட்டியுள்ளார் பிக் பாஸ்.