பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், லாஸ்லியாவின் குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். முதலில் லாஸ்லியாவின் அம்மா மற்றும் இரு தங்கைகள் உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே வந்த சில மணி நேரம் கழித்து லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தார்.

கிட்ட தட்ட 10 வருடங்களாக தந்தையை பார்க்காமல் இருக்கும் லாஸ்லியாவிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டில் முதலில் எண்ட்ரியான, அவருடைய அம்மா... நீ நீயாகவே இரு, மற்ற விஷயங்களை தூக்கி போடு என லாஸ்லியா - கவின் காதல் குறித்து, சூசகமா பேசினார்.

பின் லாஸ்லியாவின் அப்பா உள்ளே சும்மா ஒரு ஹீரோ போல் நுழைந்தார். உள்ளே வரும் போதே, அவருடைய முகத்தில் ஏதோ ஒரு கோவம் தெரிந்தது. லாஸ்லியாவும் அவரை கண்ணீருடன் உள்ளே வரவேற்றார். 

வந்த உடனேயே... உன்னை நான் இப்படியா வளர்த்தேன்... அடுத்தவங்க உன்ன காரி துப்புரத்தை பார்க்கத்தான் உள்ளே வந்தியா என காரசாரமாக பேசினார். அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு உள்ளே வா என கோவம் கலந்த பாசத்துடன் அவர் வாயில் இருந்து வார்த்தைகள் விழுந்தது.

பின் லாஸ்லியா, அவருடைய தந்தையிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட காட்சிகள், நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் கண்களையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது. லாஸ்லியாவின் தந்தை இது ஒரு கேம் என்று கூறிவிட்டு தானே உள்ளே வந்தாய். நானும் அதற்கு தான் அனுப்பினேன். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவருடைய காதல் விஷயத்திற்கு ஏதிராக பேசினார்.

மேலும் தனக்கு காசு - பணம் வேண்டாம். அதற்காக உன்னை உள்ளே அனுப்பவில்லை. அதற்கு பிச்சை எடுத்துவிட்டு போகலாம் என பல்வேறு அறிவுரைகளை கூறினார். தொடர்ந்து பேசிய அவர் எப்படி கெத்தாக உள்ளே வாந்தியை அப்படியே வெளியே வா... இது ஒரு கேம் அப்படியே நீயும் பார். இங்கு சொந்தங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடம் இல்லை என அவர் மனதில் ஆழமாக சொல்ல வந்த விஷயத்தை பதிவு செய்தார்.

இனியாவது லாஸ்லியா... காதல் கத்தரிக்காய் என அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, தனி ஆளாக இருந்து விளையாடுவாரா என்பது வரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.