பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், என்ன நிகழ்வுகள் நடைபெற உள்ளது என்பதை முன்னரே ப்ரோமோ மூலம் தெரிவித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறார்கள் நிகழ்ச்சியாளர்கள்.

ஏற்கனவே வெளியான இரண்டு ப்ரோமோவில் இருந்து நேற்றைய பிரச்சனை இன்றும் தொடர்வது தெரிந்தது. அதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், அதிகம் பேசாமல் அமைதியாகவே இருந்த லாஸ்லியா கவினை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மீரா இன்று நடத்தும் நீயா நானா டாஸ்கில்... எழுந்து பேசும் லொஸ்லியா,  பிரண்ட்ஸ் என்று சொல்றாங்க, ஆனா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பண்றாங்க. சோ நேற்று தான் இது குறித்து தெரிய வந்தது.  

இதுக்கு அவங்க சம்பந்த பட்டவங்க கிட்ட போய்,  இதுதான் பிரச்சனை உங்க கூட இப்படித்தான் பழகுகிறேன் என்று தயவுசெய்து சொல்லிட்டா இதுபோன்ற பிரச்சினை வராது என பேசுகிறார்.  இதைத்தொடர்ந்து ஏதோ கவின் கூற வர,  நீங்க பேசுவது சரியா தவறா என்பதை நான் தான் கூற வேண்டும் என மீரா கூறுகிறார்.  இதற்கு கவின் லவ்வா நட்பா என்றால், நட்பு தான் முக்கியம் என கூறுகிறார்.

இதற்கு சாக்ஷி, இவங்க கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என கூற, உடனே கவின் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்வது ப்ரோமோவில், காட்டப்படுகிறது.