தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

 

இதையும் படிங்க: “சத்தியமா விடவே கூடாது”.... சாத்தான்குளம் சம்பவத்திற்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்...!

நடிப்பிலும்  “பில்லா” போன்ற கிளாமர் படமானாலும் சரி,  “அறம்” போன்ற ஹீரோயின் சப்ஜெக்ட் ஆனாலும் சரி கலக்கி அடிக்கிறார்.  இப்படி ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாராவின் அழகு ரகசியம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. “நானும் ரவுடி தான்” படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின்றன. 

 

இதையும் படிங்க:  படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இடையில் நயன்தாராவிற்கு கொரோனா என வதந்தி கிளம்ப குட்டி பாப்பாவாக மாறி கலக்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இதே சமயத்தில், அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் ரசிகை ஒருவரின் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நயன்தாராவைப் போலவே இருக்கும் அந்த பெண்ணின் பெயர் மிதுவிகில், இது தான் என்னுடைய கடைசி டிக்-டாக் வீடியோ என அவர் பதிவிட்டுள்ள நயன்தாரா பாடல் வைரலாகி வருகிறது. மிதுவிகில் சொன்ன மாதிரியே டிக்-டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இனி அவர் நினைத்தாலும் வீடியோ வெளியிட முடியாது. இதோ அந்த வைரல் வீடியோ....