லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் தனது நிறுவனத்தில் பணியாற்றிய லண்டன் கருணாமூர்த்தி 120 கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டார் என்று நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த நிலையில் அவரது அத்தனை புகார்களுக்கும் மறுப்பு தெர்வித்து சூடான மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கருணா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 5 பக்க அறிக்கையில்,...எனது பூர்வீகம் குடியிருக்கும் விபரங்கள் கம்பெனி விபரம் கொடுத்திருக்கும் அவரும் என்னைப்போலவே இலங்கையைச் சேர்ந்தவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் மற்றும் இந்தியாவில் கம்பெனி ஆரம்பித்து நடத்துபவர். அவர் ஒன்றும் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து தொழில் செய்பவர் அல்ல. சுபாஷ்கரன் என்னை சுரண்டல் பேர்வழி என்று குற்றச்சாட்டு கூறி மிகவும் தரக்குறைவாகவும் பெயரை பாழ்படுத்துமாறும் கடிதம் கொடுத்துள்ளார். 

ஆனால் நான் அவரது அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை நான் எப்போதுமே சட்டத்தை மதிப்பவன். சட்டரீதியில் அவரது குற்றச்சாட்டை எதிர்கொள்வேன். அதேநேரம்  சுபாஷ்கரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவரது தவறான செயல்பாடுகளை, பொதுவெளிக்கு விரைவில் கொண்டு வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

5 பக்க அறிக்கை...