பிரபல காமெடி நடிகரும், தொகுப்பாளருமான லோகேஷ் பாப் என்பவருக்கு திடீர் என கை கால் செயலிழந்த நிலையில், அவருடைய மருத்துவ செலவிற்காக அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளம் மூலம் பணம் சேகரித்து வருகிறார்கள். 

பிரபல காமெடி நடிகரும், தொகுப்பாளருமான லோகேஷ் பாப் என்பவருக்கு திடீர் என கை கால் செயலிழந்த நிலையில், அவருடைய மருத்துவ செலவிற்காக அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளம் மூலம் பணம் சேகரித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே போல்... சின்னத்திரையில் நடிகர்களாகவும், தொகுப்பாளர்களாகவும், இருக்கும் பலருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

அந்த வகையில், ஆத்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லோகேஷ் பாப். மேலும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடிதான் உள்ளிட்ட சில படத்திலும் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவருக்கு திடீர் என கை - கால் செயலிழப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அவருடைய மருத்துவ செலவிற்கு 7 லட்சம் வரை பணம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் அவர் புகைப்படத்துடன் கூட செய்தியை வெளியிட்டு பண உதவி கேட்டு வருகிறார்கள். இவரின் இந்த நிலை இவருடைய ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.