லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா ஸ்டார் ஒருவரை வைத்து புதிய படம் இயக்கப்போவதாக அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக சாதனை புரிந்தது.

அதன்பிறகு லோகேஷ் 'கைது 2' படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இது அல்லு அர்ஜுனின் 23வது படமாகும்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

கூலி படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூபாய் 50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. தற்போது அல்லு அர்ஜுன் படத்திற்காக 75 கோடி சம்பளம் பெற உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

தற்போது அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளசுகளின் மனதில் இடம்பிடித்த சாய் அபயங்கர் இசையமைக்கின்றார். இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். 2028 இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View post on Instagram