காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் நடிகை பிரியா ஆனந்த்,  முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'எல்.கே.ஜி. திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள இந்த படத்தின் டிரைலர், நேற்று நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இதில் படத்தின் இயக்குனர் ஐசரி கணேஷ், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏற்கனவே 'எத்தனை காலம் தாம் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக, இந்த டிரைலரில் ரூ.3000 கோடி செலவில் சிலை, நதியில் தெர்மாகூல் விடுவது , மனுஷனை விட மாட்டுக்கு அதிக பாதுகாப்பு, கல்லில் படுத்துக்கொண்டு காஜல் அகர்வாலுக்கு யோகா சேலஞ் என மாநில, தேசிய அரசியல் என அனைத்தையும் கவர் செய்து காட்டியுள்ளனர். 

தலைவர் இறந்தவுடன் அழுவது போல் சீன் போடுவது, திடீரென வரும் நடிகருக்கு குவியும் கூட்டம், 100 நாள் ஷோ செய்துவிட்டு சிஎம் ஆக ஆசைப்படுவது போன்ற காட்சிகள் பல நிஜ நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது.

பச்சைத்தமிழன் மற்றும் தமிழரான அஸ்வின் விக்கெட் எடுத்தால் இந்திய வீரர் என்று சொல்வதும் ராமேஸ்வரம் மீனவர்கள் சுடப்பட்டால் தமிழக மீனவர்கள் என்று சொல்வதும் ஏன்? போன்ற வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

இந்த படத்தின் டிரைலர்: