living together life with serial deepika

ரசிகர்கள்

நடிகைகள் திருமணம் என்பது அவர்களுக்கு முக்கியமோ இல்லையோ ரசிகர்களுக்கு முக்கியமோ முக்கியம். அவர் யாராய் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்று மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

மூன்று முடிச்சு

அந்த வகையில் பிரபல பாலிவுட் சீரியல் நடிகை தீபிகா காகர்.ஹிந்தியில் புகழ்பெற்ற சசுரால் சிமர் கா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல்தான் தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் டப்பாகி ஒளிபரப்பாகி வருகிறது.

விமான பணிப்பெண்

தீபிகா நடிக்க வருவதற்கு முன் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.அந்த துறையில் பணிபுரியும் ரௌணக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லிவ்விங் டூ கெதர்

அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்த தீபிகா மூன்று முடிச்சு சீரியலில் தனக்கு முதலில் கணவனாக நடித்த ஷாயிப் இப்ராஹீம் என்பவரை காதலித்து வருகிறார்.இத்தனை நாட்கள் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வரும் இவர்கள் இம்மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்களாம்

ஆனால் எங்கே எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை.