Listen to GazabKaHaiDin on loop but dont forget to sing along with it

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் லிப் டூ லிப் கிஸ் அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆடுகளம் படத்தை அடுத்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிய டாப்ஸி தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்துக்கு அழைக்கும் அளவிற்கு அளவுக்கு வளர்ந்துவிட்டார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Listen to #GazabKaHaiDin on loop, but don't forget to sing along with it! <3 #DilJuunglee#16Februarypic.twitter.com/LGZgWos2j0

— taapsee pannu (@taapsee) 30 January 2018


இந்நிலையில், டாப்ஸி வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வெளியாகவிருக்கும் தில் ஜூங்கிளி பாலிவுட் படம் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. தில் ஜூங்கிளி படத்தில் வரும் ஒரு காதல் பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதை பார்ப்பதுடன் சேர்ந்து பாடுமாறும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.



டாப்ஸி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஹீரோவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. அதுமட்டுமல்ல, பாலிவுட் படங்களில் நடிகைகள் நீச்சல் உடையில் அணிந்து ஐட்டம் டான்ஸ் ஆடுவதும், படுக்கையறை காட்சிகள், லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடிப்பதும் சாதாரணம் தான் ஆனாலும், தென்னிந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.