List of strength theaters in Madurai : வலிமை படம் மதுரையில் மட்டும் மொத்தம் 24 திரையரங்கில் வலிமை திரைப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் மாஸ்டர் படம் மதுரையில் 22 திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது.
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித். இன்ன காரணம் இன்றி தினமும் அஜித்தின் ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த வலிமை வரும் ஜனவரியில் திரைக்கான உள்ளது.ரசிகர் பட்டாளத்தை மனதில் கொண்டு முதல் நாளே வசூலில் சாதனை படைக்க படக்குழு முடிவு செய்து விட்டனராம்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித்தும், எச்.வினோத்தும் இணைந்து பணியாற்றியுள்ள படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க, யோகிபாபு, புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிளாக "நாங்க வேற மாறி " சாங் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டடித்தது. இந்த பாடலை தல ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்டாக்கி வந்தனர். பின்னர் படத்திலிருந்து செகண்ட் சிங்கிளாக அம்மா சாங் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தயாரிப்பாளர் கூற்றுப்படி வலிமை வரும் ஜனவரியில் ரிலீஸாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் வலிமை கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை விற்றுள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி சென்னை - ரோமியோ பிக்சர்ஸ், செங்கல்பட்டு - ஸ்கைமேன் தயாரிப்பு, கோயம்புத்தூர் - SSIP தயாரிப்பு, மதுரை - கோபுரம் பிலிம்ஸ், திருச்சி - ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ், சேலம் - ஸ்ரீ குமரன் பிலிம்ஸ், உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வலிமை படக்குழு முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய வேண்டும் என்பதற்காக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அன்று 8 காட்சிகள் வரை திரையிட முடியும்.

இந்நிலையில் மதுரையில் உள்ள 17 திரையரங்குகள், மேலூர்,திருமங்கலம், சோழவந்தான், நாகமலை,உசிலம்பட்டி, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் தலா 1 திரையரங்கு என மொத்தம் 24 திரையரங்கில் வலிமை திரைப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் மாஸ்டர் படம் மதுரையில் 22 திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது.
