கடந்த 9 வருடங்களாக ஹிட் படங்கள் எதுவும் தராமல் பெரும் கடனில் தத்தளித்து வரும் இயக்குநர் லிங்குசாமிக்கு மறு வாழ்வு கொடுக்கும் வகையில் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் அடுத்து அவருக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

2010 வெளியான ‘பையா’ படத்துக்குப் பின்னர் ‘வேட்டை,’அஞ்சான்’,’சண்டக்கோழி2’ என்று தொடர்ச்சியான படுதோல்விப் படங்கள் கொடுத்து துவண்டுபோயிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இதனால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கிறார். இந்நிலையில் பெரிய ஹீரோக்கள் யாரும் இவர் இயக்கத்தில் நடிக்க முன்வராத நிலையில் லிங்கு சொன்ன ஒரு கதைக்கு உடனே ஓ.கே சொல்லியிருக்கிறாராம் லாரன்ஸ்.

காஞ்சனா 3 படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் தமிழில் படம் நடிக்கவில்லை.காஞ்சனாவின் முதல் பாகத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில் இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கிறார். அக்‌ஷய்குமார் கியரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இதனால் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கப் போகும் படம் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.நாற்பது கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ஒரு கதாநாயகனை எப்படி சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு விடைகிடைக்கும் வலையில்தான் லிங்குசாமி ராகவா லாரன்ஸ் காம்பினேஷன் உருவாகியிருப்பதாகவும், சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியே தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்.