அமெரிக்காவில் நடைபெற்ற 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன் நாதஸ்வரம். 

அமெரிக்காவில் நடைபெற்ற 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன் நாதஸ்வரம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

12 வயதாகும் இவர், மிகவும் வேகமாக பியானோ வாசித்து 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பட்டம் பெற்று, தமிழகத்திற்கும் குரு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் புகழ் சேர்த்தார்.

இந்த நிலையில் லிடியன் நாதஸ்வரம் தற்போது இசையமைப்பாளராக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முதல்முறையாக இயக்கவுள்ள 'Barroz' என்ற திரைப்படம் தான் அது.

மேலும் மோகன்லால் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக மோகனன் என்பவர் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து இசையமைப்பாளராக லிடியன் நாதஸ்வரம் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.