lekha washington introduce diy partnership marriage

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை லேகா வாஷிங்டன், காதலர் தினம் படத்தில் கணினி முன் அமர்ந்திருக்கும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகி, பின் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தவர்.

நடிகை மட்டுமின்றி, மாடலிங் துறை, பாடல் எழுதுவது, டிசைனிங் போன்ற பல துறைகளிலும் கால் பதித்து கலக்கி வருகிறார். 

இவர், ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய காதலருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்ததாகக் கூறப்படது. இந்நிலையில் இவர், அந்த உறவை முறித்துக்கொண்டு திருமண பந்தத்தில் இணைய உள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டார். 

மேலும் தற்போது இவருடைய புது விதமான கல்யாணம் குறித்து பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியுள்ளது, இது திருமணம் இல்லை, DIY - பார்ட்னர் ஷிப் என்றும். இந்த வகைத் திருமணத்தின் மூலம் எங்களுக்குத் தேவையானதை நாங்களே செய்துகொள்வோம் என்றும் எதிர்பார்ப்புகள் இருக்காது எனக் கூறியுள்ளார்.

Scroll to load tweet…