கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், சூர்யா மற்றும் மோகன் லாலின் கதாபாத்திரம் குறித்த  சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா, 'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் 'சூர்யா 37' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் மோகன் லால், போமன் இராணி, சமுத்திரக்கனி, சயீசா சாகல், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சூர்யா ராணுவ அதிகாரி கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.

தற்போது நொய்டாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகரான மோகன்லால் இந்திய பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய பாதுகாவலர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ் தனது குரலில் பாடியுள்ளார். இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி  விருந்தாக இந்த படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட உள்ளது படக்குழு.