நடிகர் விஜய்யின் ‘பிகில்’படப்பாடல் ஒன்று திருட்டுத்தனமாக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் திகில் அடைந்துள்ளனர். 31 வினாடிகள் மட்டுமே ஓடும் அப்பாடலை ரஹ்மான் பாடியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் ’பிகில்’. விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.விஜய் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா என்று இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று நேற்று இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியானது. ‘சிங்கப்பெண்ணே...சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமே...’ எனத் தொடங்கும் அப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ’பிகில்’ ஷூட்டிங்கின் போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்த நிலையில் மீண்டும் ஒரு பாடலும் லீக்காகி இருப்பது விஜய்யின் ‘பிகில்’படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Scroll to load tweet…