lawrence open talk about ajith
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகம் கொடுத்து நடிகர், இயக்குனர் என தற்போது கலக்கி வருபவர் லாரன்ஸ்.
இவர் நடிப்பில் தற்போது வெளியாகிய சிவலிங்கா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படம் குறித்து அவரிடம் பேசியபோது, அவருடைய பழைய மறக்கமுடியாத சிலவற்றை பற்றி பகிர்ந்துகொண்டார்.
இதில் முக்கியமானது அவர் அஜித் குறித்து பேசியது, ‘ இன்று நடிகராகிவிட்டேன், ஆனால், என்னை முதன் முறையாக திரையில் கொண்டு வந்தது சரண் சார் தான்.
மேலும், உச்சத்தில் இருக்கும் போது எனக்கு ஒரு சோலோ சாங் ஆட அவர் படத்தில் அனுமதி கொடுத்தது அஜித் சார் தான்.
அவர் மட்டும் வேண்டாம் என்று கூறியிருந்தால் அந்த படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்காது’ என் முகம் திரையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மிகவும் உருக்கமாக பதிலளித்துள்ளார்.
