lawrence fasting proted canceled why

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி வெற்றிகண்டவர் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸ். இவர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையும் உரிய அனுமதி கொடுத்திருந்த நிலையில் இன்று காலை ராகவா லாரன்ஸ் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்க வள்ளுவர் கோட்டம் வந்தார். 

ஆனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் சில மணிநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் அவருக்கு அளித்த அனுமதி மறுக்க பட்டதற்கான காரணம் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று தமிழகம் வருகை தருவதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படதாக காவல்துறையினர் தெரிவித்ததால் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்து கலைந்து சென்றனர். 

இன்று போராட்டம் கைவிடப்பட்டாலும் கண்டிப்பாக இன்னொரு நாள் இந்த போராட்டம் நடைபெறும் என அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது.