சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இயக்குனர், தயாரிப்பாளர், கிராபிக்ஸ் டிசைனர் என சினிமாவில் தன் பங்களிப்பை செய்தவர்.  தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். அவர்கள் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சவுந்தர்யா தனது மகனுடன் தந்தையின் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து. இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்க இருக்கிறது. சமீபத்தில் இதற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற பிப்ரவரி 11ந் தேதி இவர்கள் திருமணம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் எளிமையாக நடக்கிறது. 

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் முக்கியமான (VVIP) நடிகர் , நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கிறார்கள் இந்த திருமண விழாவில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என அறிக்கை வெளியானது.

இந்நிலையில், கல்யாணம் இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில்  ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவசர அவசரமாக சென்னை தேனாம்பேட்டை E3 காவல் நிலையத்திற்கு வந்த அவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், வரும் 10 ஆம் தேதி எங்களது மகள் திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற இருப்பதால் இந்த கல்யாண விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்  எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.

 மேலும், அந்த மனுவில் பிப்ரவரி 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிமுதல் இரவு 10 மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் என்றும், அதற்கடுத்து ஒருநாள் விட்டு பிப்ரவரி 12 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என கூறியுள்ளார்.