latest picture of simbu viral on social medias
நடிகர் சிம்புவின் அண்மைக்கால லேட்டஸ்ட் படம் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி அசத்தி வருகிறது, பலரும் சிம்புவின் படத்தை சிம்பிளாக இருப்பதாகக் கூறி வைரலாக்கி வருகின்றனர். இந்தப் படத்தில், சிம்பு ஸ்லிம் ஆன உடற்கட்டுடன் புன்னகைத்தபடி இயக்குனர்களுடன் கூட்டணி போட்ட கோலத்தில் காட்சி தருகிறார். இயக்குனர் சேரன், இயக்குனர் சீமான், அமிர் ஆகியோருடன் சிம்பு உள்ள படம்தான் இப்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.
அண்மைக் காலமாக சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. அதனால் அவர் மீண்டும் நடிப்பாரா என்பதே கேள்விக் குறியானது. இந்நிலையில், தனது அண்மைப் படத்தை உலவ விட்டுள்ளார் சிம்பு. இது, டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக, பலரும் இதனைப் பகிர்கின்றனர் என்பதுடன், தங்கள் கருத்துகளையும் கூறி வருகின்றனர். அதில் ஒருவர், ஆகா இது மக்கள் நலக் கூட்டணி வைகோ, திருமா..க்கு டஃப் காம்பெடிஷன் கொடுக்கிற மாதிரி இல்ல இருக்கு...! என்று ஒருவர் கலாய்த்திருக்கிறார்.
தலைவா திரும்பி வந்துட்டியா என்ற் ஒருவர் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்கிறார்.
திரைப்படம் எதற்கு? நீட்ரெண்டிங்கில் இருக்க ஒரு புகைப்படமே போதுமானது! என்கிறார் ஒருவர்.
