நடிகை நிலானி காதலித்துவிட்டு தன்னை அவமரியாதை செய்து விட்டதால் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குநர் லலித்குமார், இறப்பதற்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடைசியாக பதிவிட்டுள்ளார். 

சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 
எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் 
போலீசாருக்கு எதிரான கருத்துகளைக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்து, குன்னூரில் பதுங்கியிருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலானி மீண்டும் சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை நிலானி தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தபோது, அவருடைய காதலன் காந்தி லலித்குமார், திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக நிலானி போலீசில் புகார் கூறியிருந்தார். 

இந்த நிலையில் நிலானியின் காதலன், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். லலித்குமார் இறப்பதற்கு முன்பு, நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரது இறப்புக்கு சின்னத்திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட காந்தி லலித் குமார் உதவி இயக்குநராக இருந்துள்ளார். அவரது இறப்புக்கு முன்பு அவரது பேஸ்புக் பக்கத்தில் சில சுவராஸ்யமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மின்சார கனவு படத்தில், பிரபுதேவா பாடிய பாடலுக்கு டப் ஸ்மாஸ் செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் லலித்குமார். நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து கமல் பேசிய வீடியோவையும் அவர் டப் ஸ்மாஸ் செய்துள்ளார்.

உதவி இயக்குநராக பணிபுரிந்த லலித் குமார், கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் லலித் குமார் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார். அதில், நீர் வீற்றிருக்க காத்திருக்கும்... அரியாசனம்... நீர் வழிநடத்த விழிதிறக்கும் தமிழ்தேசம்.. வாழ்க என்று லலித் குமார் பதிவிட்டிருந்தார்.