lakshmi ramakrishnan talking about director suseedhran

தமிழ் சினிமாவில் சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்து, இன்று முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஒரு நடிகையாகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்தி கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மேலும் இவர் தொகுத்து வழங்கி வரும் குடும்ப சண்டைகள் தீர்க்கும் நிகழ்ச்சியை ஒரு சிலர் எதிர்த்தாலும், பலரும் ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில், தனக்கு பலமாக அமைத்த குரலை கேட்டாலே எரிச்சலாய் இருக்கிறது என்று தன்னை அசிங்கப்படுத்தி படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேற்றிய பிரபல இயக்குனர் பற்றி மனம் திறந்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் நடித்த போது, இயக்குனரிடம் என்னுடைய கதாபாத்திரத்திற்கான டப்பிங் தானே பேசி தருவதாக கூறியபோது, உன் குரலை கேட்டாலே எரிச்சலா இருக்கு, அதை நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார். 

நான் மிகவும் கோபமாக உடனடியாக படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறினேன் , மேலும் இன்று தன்னுடைய பலமே தன்னுடைய குரல் தான் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.