தற்போது பெண்களுக்கு ஆதரவாக விஸ்வரூபம் எடுத்துள்ள மீடூ இயக்கம் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இதன் மூலம் அலுவலகம் முதல் பெண்கள் எந்த துறையில் வேலை செய்தாலும் அவர்கள் சந்தித்து வரும் பாலியல் துன்புறுத்தல் குறித்து மீடூ இயக்கத்தில் தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதன்பின்னர் பிரபல நடிகைகள் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு மீடூ என பதிவிட்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து வந்தனர்.

பின்னர் மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து சின்மயி உடன் சேர்ந்து செய்தியாளர்களுக்கு கூட பேட்டி கொடுத்தார் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான லக்ஷ்மி ராம கிருஷ்ணன்.

இவர், தற்போது பிரபல மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறி மலையாள மற்றும் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது ‘ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த பட பூஜையில் கலந்துக்கொண்டு உள்ளார் இவர், பின்னர் திருவனந்தபுரத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றதாகவும் அப்போது அவர் மொபைலுக்கு, "ஹாய்...நான் டைரக்டர் ஹரிஹரன். உங்களை காண நானும் திருவனந்தபுரம் வந்துள்ளேன்..இன்று இரவு இங்கே தங்குங்கள்..நாம் சாதிக்கலாம் என அவர் மெசேஜ் கொடுத்து உள்ளாராம். 

அதற்கு எவ்வளவு கேவலமாக, பேச முடியுமோ அந்த அளவிற்கு திட்ட  மெசேஜ் அனுப்பி வைத்தாராம் லக்ஷ்மி. இப்போது  மீ டூ  சூடு  பிடித்து உள்ள நிலையில் இதுதான் சரியான தருணம் என எண்ணி  தற்போது வெளிபடையாக கூறி உள்ளார் லக்ஷ்மி. 

அதுமட்டும் இல்லாமல், அவர்  பெரிய  இயக்குனர் இப்போது அவரை  பற்றி மீடூ வில் போட வேண்டாம் என சிலர்  கூறினார்களாம். பெரிய ஆளுனா சும்மா  விட்டுடனுமா என்ன ..? அன்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் இன்று எனக்கு சொல்ல வாய்ப்பு கிடைத்து  உள்ளது என கூறி, லக்ஷ்மி  ராமகிருஷ்ணன்  இயக்குனர் ஹரிஹரன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து உள்ளார் 
 இந்த சம்பவம்  தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது