இயக்குனர் விஜயின் படம் என்றாலே மனதை வருடிச்செல்லும் காட்சிகளால் நிறைந்திருக்கும் என்று சொல்லிவிடலாம். அந்த அள்விற்கு கதாபாத்திரங்களை படத்தில் ஒன்ற வைத்து பார்வையாளர்களின் மனஓதோடு ஒட்ட வைத்துவிடுவார். குழந்தைகளை மையமாக வைத்து இவர் இதுவரை எடுத்த படங்களில் சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அந்த வரிசையில் அவர் எடுத்திருக்கும் படம் தான் லஷ்மி. 

இந்த திரைப்படம் லஷ்மி எனு குழந்தையை கதாநாயகியாக கொண்டிருந்தாலும் கதையின் நாயகனாக வடிவெடுத்திருப்பது நடனம் தான்.
படிப்பின் மீது ஆர்வம் காட்டும் அம்மா. நடனத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் குழந்தை. அவரின் நடன ஆர்வத்திற்கு உதவ வரும் புது கதாப்பாத்திரம்(பிரபுதேவா). கடைசியில் இவர்கள கலந்து கொள்ளும் ஒரு பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியில் வெற்றி பெற்றனரா? என வழக்கமான கதைகளை போல தான் இந்த லஷ்மி படத்தின் கதையும் அமைந்திருக்கிறது.


ஆனால் வழக்கமான கதையையே சொன்ன விதம் பாராட்டுதலுக்குரியதாக இங்கு அமைந்திருக்கிறது. இதுவரை வந்த நடனம் சார்ந்த படங்களில் எல்லாம் இளைஞர்களை தான் முக்கியமாக காட்டி இருப்பார்கள்.ஆனால் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் தான் அந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றனர். 
நடனம் மீது ஆர்வமுடன் இருக்கும் லஷ்மிக்கு அவரது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷின் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆனால் அவரது நடனத்திறமையால் ஈர்க்கப்பட்ட பிரபுதேவா லஷ்மி நடனம் கற்பதற்கு பண உதவிகளை செய்கிறார். தொடந்து ஒரு நடனப்போட்டியில் கலந்து கொள்ளும் லஷ்மி அணியினர் அவராலேயே தோற்றுவிட அடுத்தடுத்து வரும் சவால்களை எதிர்கொண்டு லஷ்மி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே மீதி கதை.

குழந்தைகளை மையப்படுத்திய கதையாக இருப்பதால் , போட்டி இருக்கிறது ஆனால் பொறாமை இல்லை. நெகிழ்ச்சியான பல தருணங்களை கொண்டிருக்கும் இந்த படத்தில் வைத்திருக்கிறது இயக்குனரின் டச். கோவை சரளாவில் காமெடி நல்ல எண்டெர்டெயின்மெண்ட் சப்போர்ட். கூடவே கருணாகரனும் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

நடனத்தை மையமாக கொண்ட கதை என்பதால் நடனக்காட்சிகள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. அதற்கு ஏற்ப தாளம் போட வைக்கிறது இசை. லஷ்மியாக நடைத்திருக்கும் குழந்தை நட்சத்திரம் நடனத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.

ஆரம்பத்தில் சாதாரண கேண்டீன் நடத்துபவராக அறிமுகமாகிய பிரபுதேவா, படத்தின் கிளைமேக்ஸில் தான் யார் என்பதை கூறும் இடத்தில் ட்விஸ்ட். அதன் பிறகு வரும் நடனக்காட்சிகள் மாஸ் என்றே கூற வேண்டும். 

படத்தின் பல இடங்களில் ஹாலிவுட் படங்களின் சாயல் தெரிகிறது. நடிப்பிலும் கூட யதார்தத்தை தாண்டி ஹாலிவுட் தனம் கொஞ்சம் தூக்கல் தான். மற்றபடி நடனத்தால் ஈடு இருப்பதால் நெகடிவ்ஸ் அதிகம் தெரியவில்லை. நடனத்தை விரும்பும் ஒவ்வொருவருக்கும் லஷ்மி ஒரு நல்ல திரைவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை மொத்தத்தில் லஷ்மி ஒரு ஒரு நடன சூறாவளி.