Asianet News TamilAsianet News Tamil

விரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு டும் டும் டும்?

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' படத்தின் மூலம் தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.
 

lakshmi menon marriage controvercy
Author
Chennai, First Published Jun 15, 2019, 3:23 PM IST

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' படத்தின் மூலம் தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'சுந்தர பாண்டியன்' படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை, என பல படங்களில் நடித்தார்.

lakshmi menon marriage controvercy

ஆனால், புதிய நடிகைகளின் வரவால், லட்சுமி மேனன் மார்க்கெட் டல் அடித்தது. இதனால், லட்சுமி மேனனும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சாகசம் போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.

தற்போது இவருடைய கைவசம், பிரபுதேவாவுடன் நடித்து வரும் 'யங் மங் சங்' என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

lakshmi menon marriage controvercy

இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்து வைக்க, இவருடைய  பெற்றோர் தீவிரமாக மாப்பிளை பார்த்து வருவதாக, செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையா? என லட்சுமி மேனன் சொன்னால் தான் தெரியவரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios