ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நிக்கிகல்ராணி, ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'கடவுள் இருக்குறான் குமாரு' இந்த படத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மையை கிண்டல் செய்வது போல ஒரு கட்சி இடம் பெற்றிருந்தது.
இதற்கு தனது டுவிட்டரில் இந்த காட்சி இடம் பெற்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் லட்சுமி. ராமகிருஷ்ணன் மேலும் இது பற்றி அவர் கூறுகையில் சினிமாவின் மகத்துவத்தை தெரிந்தவர்கள் யாரும் மற்றவர்களை கிண்டல் செய்ய மாட்டார்கள் என்றும்.
மேலும் என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தவர்கள் நான் இயக்கிய தரமான படமான 'அம்மணி'யை பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதே போல் சென்னை வெள்ளத்தின்போது ஆர்.ஜே.பாலாஜி பலருக்கு செய்த உதவியை கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதையும் யோசித்து பாருங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் ஒருசில இயக்குனர்கள் இளைஞர்களை மது, பெண்கள், அரியர் ஆகியவை மட்டுமே பேசுவதாக படமெடுக்கின்றனர். வேறு எதையும் அவர்கள் இளைஞர்களுக்கு கற்றுத்தரவில்லை என்று கூறினார்.
'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை பொய் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு பொய்யான நிகழ்ச்சியை எப்படி 1000 தொடர்கள் தாண்டி வெற்றிகரமாக நடத்த முடியும். பார்க்கும் மக்கள் என்ன முட்டாள்களா? என கேள்வி எழுப்பியதோடு மட்டும் இல்லாமல்.
என்னுடைய அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு நல்ல வாய்ப்பு ஒன்று தருகிறேன். அந்தவாய்ப்பை ஏற்றுக்கொள்ள தயாரா? என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்க.
இதற்கு உடனே பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், 'உங்கள் கதை எனக்கேற்றவாறு நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிக்கின்றேன் என்றும் . நானும் 'காக்கா முட்டை', 'பரதேசி', 'ஆடுகளம்' போன்ற படங்களில் பணியாற்றியவன்தான். எனவே வரும் புதன் அல்லது வியாழன் நாம் கண்டிப்பாக சந்திப்போம்' என்று கூறி சவாலை ஏற்றுள்ளார்.
உண்மையில் இவர்கள் இருவரும் சிந்திப்பார்களா, படத்தில் இணைவர்களா...??? பொறுத்திருந்து பார்ப்போம்.
