Lady Superstar is acting in Meena Kumari biopic ...

முன்னாள் கதாநாயகியான மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மீனா குமாரியாக பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி மீனா குமாரி. இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகிறது.

மீனாகுமாரியின் வேடத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

வித்யாபாலனிடம் ஒருவரிக் கதை தான் சொல்லப்பட்டுள்ளதாம். கதையும் அவருக்கு பிடித்து போக நடிக்க தயாராக இருக்கிறாராம்.

இதையடுத்து மீனா குமாரின் முழுக் கதையையும் அவரிடம் சொல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

விரைவில் வித்யா பாலன் இந்தப் படத்தில் நடிப்பது பற்றிய அறிவிப்பை அவராகவே வெளியிடுவாராம்.