சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த, 'தர்பார்' படத்திற்கு பின், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 168 படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளும், தீவிரமாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே ரஜினிகாந்துடன் 90 களில், டூயட் பாடிய நடிகை மீனா, குஷ்பு, ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். அதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ், சித்தார்த், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் நடிப்பது உறுதியாகி உள்ளது. 

இவர்களை தொடர்ந்து யாரும் சற்றும் எதிர்பாராத பிரபலமான, லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தலைவர் 168 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக, சன் பிச்சர்ஸ் நிறுவனம், அதிகார பூர்வ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்து வரிசையாக பல முன்னணி பிரபலங்கள் தலைவர் 168 படத்தில் இணைந்து வருவதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதோ...