செப்டம்பர் 9 ஆம் தேதி, 'லாபம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு தற்ப்போது வெளியிட்டுள்ளது. 

செப்டம்பர் 9 ஆம் தேதி, 'லாபம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு தற்ப்போது வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் விஜய் சேதுபதி 7 சி என்டர்டெயின்மெண்ட் நிறுவதுடன் இணைந்து தயாரித்து வந்த 'லாபம்' திரைப்படம், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே லாபம் திரைப்படம் ரிலீஸாகுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. ரசிகர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துக்களும், ஒலிக்கும் போராட்ட குரலும், என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை. எங்கள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாகவும் லாபம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம். 

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடப்போவதாக தகவல்கள் சில தகவல்களும் வெளியாகின. ஆனால் விஜய் சேதுபதி நிச்சயம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அடித்துக்கூறி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஐம்பது சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கினை திறக்க அனுமதி அளித்துள்ளது. எனவே செப்டம்பர் 9ம் தேதி லாபம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதே நேரத்தில் புரோமோஷன் பணியிலும் தீவிரம் காட்டி வரும் படக்குழு, நாளை மாலை 3 மணிக்கு 'லாபம்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் வேறு விஜய் சேதுபதி தோன்றுவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எனவே இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் போது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.