k.v.anand wish dhansh
நடிகராக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகம் கொடுத்த தனுஷ், தற்போது பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல ரூபத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.
தன்னுடைய அப்பா கஸ்தூரி ராஜா வழியிலேயே தன் முதல் படத்தை நடிகர் ராஜ் கிரணை வைத்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே ரஜினி வாழ்த்தியாக செய்திகள் வெளிவந்ததை நம் தளத்திலேயே கூறி இருந்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்டது. திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் தனுஷை வாழ்த்தி வருகின்றனர். பலர் நல்ல கருத்துக்களை வெளியீட்டதை ட்விட்டரில் காண முடிந்தது.
தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டர் மூலம் படத்தை பார்த்த பலர், ராஜ் கிரண் நடிப்பு மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.
