விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்த 'கவண்' படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மட்டுமே சுமார் 20 மணி நேரக் காட்சிகளாக படமெடுத்துள்ளாராம் இயக்குனர்.

இந்த காட்சிகள் அப்படியே தற்போது எடிட்டர் அந்தோணி ரூபனின் மேஜையில் உள்ளதாம் . இந்த 20 மணி நேர காட்சிகளை எப்படி கட் செய்து எப்படி பேஸ்ட் செய்வது என்றே தெரியவில்லை என்றும் இந்த பணி தனக்கு இயக்குனர் கொடுதுள்ள பெரிய சவால் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் எடிட்டர்.

பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் கதை வசனத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஜனவரி 2017யில் வெளியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.