k.v.anand father pass away
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர் கே.வி.ஆனந்த். அவர் இயக்கத்தில் கவண் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அவரின் தந்தை K.M.வெங்கடேஷ் மரணமடைந்துள்ளது செய்தி ஒட்டு மொத்த கவண் படக்குழுவினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
75 வயதாகும் அவரது தந்தை , உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது .
கே.வி.ஆனந்துக்கு ஏற்பட்டுள்ள இந்த துயர நேரத்தில் சினிமாதுறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில பிரபலங்கள் அவரது தந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
