குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆகி விட்டார். மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா.  

குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆகி விட்டார். மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அனிகா, தற்போது விருவிருவென வளர்ந்து விட்டார். முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக உருவாகி இருக்கும் அனிகாவை, குட்டி நயன்தாரா என்றே அழைக்கிறது திரையுலகம். சோசியல் மீடியாவில் அடிக்கடி போட்டோஷூட் ஸ்டில்களை பதிவிட்டு வந்த அனிகாவுக்கு வாய்ப்புகள் தேடி வரும் என்று கணித்தார்கள். அதற்காகவே அவரும் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அதற்கு பலனும் கிடைத்து விட்டது. தெலுங்கு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட படம், கப்பேலா. அன்னாபென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை முகமது முஸ்தபா இயக்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் இயக்கிய முகமது முஸ்தபா தெலுங்கிலும் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார் அன்னா பென். அவர் கேரக்டரில் அனிகா சுரேந்திரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

வரும் காலத்தில் நயன்தாராவுக்கே அனிகா டஃப் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.