"கலைஞரை" பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன "குஷ்பூ"..!

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கருணாநிதி பற்றி தனியார் தொலைகாட்சிக்கு மனம் திறந்து சிறப்பு பேட்டி அளித்துள்ளார் அப்போது அவர் பேசியது," "நான் அரசியலில் ஈடுபட நினைத்து சேர விரும்பிய கட்சி திமுக..இந்த விஷயத்தில் நான் முதலில் சுந்தர் சியிடம் தான் தெரிவித்தேன்.....இதை கேட்டு ஷாக் ஆன அவர், நீ ஜெயா டிவி யில் நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்தம் செய்திருக்க..எப்படி திமுக வில் இணைய முடியும் என ஆச்சர்யமாக கேட்டார்....

அதுமட்டும் இல்லாமல் அப்போது என் மீது வழக்கு ஒன்று இருந்தது..எனவே வழக்கு முடிந்த உடன் திமுகவில் சேரலாம் என முடிவு எடுத்து இருந்தேன்..இதற்கு இடையில் கட்சியில் சேர்ந்தால், வழக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக திமுக வில் இணைவதாக எண்ணுவார்கள் என நினைத்து, அப்போது  நான் கட்சியில் இணையாமல் இருந்தேன்...

பின்னர் ,அரசியலில் இணைய கருணாநிதியிடம் தெரிவித்த போது....

நான் அரசியலில் இணைய விரும்புகிறேன் என தெரிவித்த உடனே, அடுத்த நொடியே "வாழ்த்துக்கள்" என கூறினார். ஆனால் திமுக  வில் இணைய வேண்டும் என அவர் கேட்கவில்லை...உனக்கு எந்த கட்சி விருப்பமோ அந்த கட்சியில் இணைந்து பணியாற்று என கூறினார்.

அப்போது நான் திமுக வில் தான் இணைய விருப்பம் என தெரிவிக்கவே, அவர் ஆச்சர்யமாக பார்த்தார். பின்னர் திமுக வில் இணைந்து சில நிகழ்வுகளுக்கு பின், திமுகவிலிருந்து வெளியேறலாம் என்று நான் முடிவெடுத்த போது, எக்காரணத்தை கொண்டும் கலைஞரை சந்தித்துவிட கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தேன். 

ஒரு வேளை அவரை சந்தித்தால் எனது மனம் மாறிவிடும் என நான் நினைத்தேன்...பின்னர் அறிவாலயத்தில் நான் ராஜினமா கடிதத்தை அளித்த போது ஏற்றுக்கொள்ளவில்லை.பின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று அங்கு இருந்த அமைப்பாளர்களிடம் என் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தேன்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.