kushpoo share the family photo

குஷ்பு சந்தர்சி

தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
வருஷம் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் குஷ்பு.திரையுலகில் முன்னணியில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மகள்கள்

நடிகை தயாரிப்பாளர் என்பதை தாண்டி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார் குஷ்பு. குஷ்பு,சுந்தர்.சி தம்பதியினருக்கு அவந்திகா அனந்திதா என்று இரு மகள்கள் உள்ளனர்.மூத்த மகள் அம்மா குஷ்பு போன்றும் இளைய மகள் அப்பா சுந்தர் சி யை போன்றும் இருக்கிறார்கள்.

உயரம்

மகள்கள் இருவரும் தந்தை சுந்தர் சியை போன்று நல்ல உயரம். தந்தை மகள்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நின்றால் குஷ்பு மட்டும்தான் உயரம் குறைவாக தெரிவார்.இந்த நிலையில் குஷ்பு குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

கிளாஸ், மாஸ்
என் உயர்ந்த உலகத்தில் நான்தான் குள்ளம். மகள்கள் வளர்ந்து விட்ட பூரிப்பில் இருக்கிறார் குஷ்பு.தனது மூத்த மகள் கிளாஸ் என்றால் இளைய மகள் மாஸ் என்பார் குஷ்பு.அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு.