நடிகை குஷ்பு, சீரியல், படங்கள் தயாரிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சி என பிஸியாகவே இருந்தாலும்... அரசியலிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார். 

நடிகை குஷ்பு, சீரியல், படங்கள் தயாரிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சி என பிஸியாகவே இருந்தாலும்... அரசியலிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர், இது தேர்தல் நேரம் என்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

குஷ்பு நடிகை என்பதால், இவர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டங்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில், குஷ்பு முன்னே செல்ல அவரை பலர் சூழ்ந்து கொண்டனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நபர் குஷ்புவை தொடக்கூடாது இடத்தில் தொட்டு தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, அனைவர் மத்தியிலும் அவரை பளார் பளார் என அறை விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலர் குஷ்புவின் துணிச்சலுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…