தல அஜித்துக்கு பல தமிழ் பிரபலங்களும் ரசிகர்கள் தான், அந்த வகையில் நடிகை குஷ்பூ எப்போதுமே அஜித்தை விட்டு கொடுத்ததே இல்லை.
குஷ்பூவிடம் பல முறை அஜித் பற்றி கேள்வி எழுப்பும் போதும் நான் ஒரு அஜித் ரசிகை, அவரது படத்திற்கு ரசிகர்களுடன் இணைத்து தானும் கார்த்திருப்பதாக கூறுவார்.
இந்நிலையில் நேற்று வெளியான பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு, மிகவும் சந்தோஷமாக நான் அப்பவே சொன்னேன்.... தல தல தான் என்று புகழ்ந்துள்ளார்.
மேலும் தனக்கு பிடித்த பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருமான ஜார்ஜ் குளூனி போல் இருப்பதாகவும், என்ன ஒரு மாற்றம் ஐ லவ் இட் என கூறியுள்ளார்.
குஷ்பூ மட்டும் இல்லை பல பிரபலங்கள்... தங்களது வலைத்தளம் மூலமும் சிலர் அஜித்துக்கு போன் செய்தும் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றார்களாம்.
