முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. பின் ஒரு அணியாக செயல்பட்ட அதிமுக இரண்டு அணியாக பிளவு பட்டு, முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்த்த போது, பன்னீர்செல்வம் அணியினர் கனவிலும் கூட, இரு அணியும் இணையாது என்று சவால் விட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது திடீர் என அதிமுக அலுவலகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வருகை தந்து இருவரும் கை குலுக்கி, வாழ்த்துக்கள் பரிமாறி ஒரே அணியாக இணைந்தனர்.

இவர்களுடைய இணைப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் குஷ்பு அதிரடி ட்விட்  போட்டுள்ளார். அதில்  " அதிமுக அணிகள் இணைப்பு கேலிக்கூத்து" என தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.