kushboo and rajini again join the ranjith movie

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வைரலாக பரவிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பா.ரஞ்சித், வரும் ஏப்ரல் 14 தேதி இந்த படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என்று சமீபத்தில் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து பின்னர் அது இயக்குனரால் மறுக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையென்றால் கடந்த 1992ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினி-குஷ்பு நடித்த 'மன்னன்', 'அண்ணாமலை' மற்றும் 'பாண்டியன்' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் ரஜினி மற்றும் குஷ்பு இணைவது உறுதிப்படுத்தபட்டால் 25 வருடம் கழித்து இந்த படம் மூலம் இருவரும் இணைவார்கள்... மீண்டும் இந்த வெற்றி ஜோடியை விரைவில் ரசிகர்கள் திரையில் பார்க்கலாம்...