நடிகை குஷ்பு கிட்ட தட்ட 12 வருடத்திற்கு பிறகு மலையாளத்தில், பவன் கல்யாணுடன் நடித்து வருகிறார், அதே போல் தெலுங்கிலும் 10 வருடத்திற்கு பிறகு நடிக்க கமிட் ஆகி இருப்பதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

குஷ்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு பவன் கல்யான் படத்தில் நடிக்க வருகின்றார். மேலும், ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தில் கூட இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து ஒரு புகைப்படம்  தீயாக பரவியது, இதில் ஸ்கூருவில் கேமரா அமைத்து தற்போது சிலர் பெண்களை படம்பிடிக்கின்றனர்.

அதனால், பெண்களே உஷாராக இருங்கள் என ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

இதைக்கண்ட குஷ்பு மிகவும் அதிர்ச்சியுடன் இது உண்மையா? என டுவிட்டரில் கேட்டுள்ளார். இதன் மூலம் பெண்கள் ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் உடை மற்றும் போது பல முறை அந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு மாற்ற வேண்டும் என கூறுவது போல் இதனை ஷார் செய்துள்ளார்.