kushboo about mersal movie
'மெர்சல்' படத்துக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துக் கூறி வருவதோடு, பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பற்றிய தங்களுடைய கருத்தையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, மெர்சல் படத்தைப் பார்த்து தான் மெர்சலாகி விட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் 'மெர்சல்' படம் விஜய்யின் ஒன் மேன் ஷோ, விஜய் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் நடித்துள்ளார் என்றும் ஒரு காட்சிகூட இந்தப் படத்தில் மந்தமாக இல்லை என்றும் கூறி தன்னுடைய வாழ்த்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
