kusboo revel the acting rajini or not

2.0 படத்திற்கு பிறகு , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹா, தீபிகா படுகோனே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பல தகவல்கள் வெளியாகியது, ஆனால் இதற்கு இயக்குனர் தரப்பில் இருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது ரஜினி நடிக்க உள்ள அடுத்த படத்தின் நாயகி 90 களில் முன்னணி நாயகியாக வலம்வந்த குஷ்பு என்று பல தகவல்கள் வெளியாகியது.

இதனால் பல ரசிகர்கள் 25 வருடம் கழித்து மீண்டும் இருவரையும் திரையில் பார்க்க ஆர்வமாக இருந்தனர்..

இந்த செய்தி குறித்து நடிகை குஷ்புவிடம் கேட்டதற்க்கு , இந்த படத்தில் நான் நடிக்க வில்லை என்றும் , இந்த தகவல் தனக்கும் ஒரு செய்தியாகத்தான் கிடைத்ததாக கூறினார்...

மேலும் தற்போது நான் எந்த படத்திலும் நடிப்பதாக இல்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.