நடிகர், இயக்குனர், அரசியல்வாதி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் டி.ராஜேந்தரின். இவரின் இளைய மகன், குறளரசனின் திருமணம் நேற்று இஸ்லாமிய முறைப்படி மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் இவருடைய குடும்பத்தினர். 

சகோதரனின் திருமணத்தில் கலந்து கொள்ள லண்டனுக்கு உடல் எடை குறைப்பு பயிற்சிக்காக சென்ற சிம்பு நேற்று சென்னை வந்து திருமணத்தில் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து, வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி, குறளரசன் - நபீலா அஹ்மத் திருமண வரவேற்பு பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இதற்காக பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு டி.ராஜேந்தர் மற்றும் அவருடைய மகன் குறளரசன் இருவரும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.

அந்த வகையில், தற்போது திருமணம் முடிந்த கையேடு... குறளரசன் நடிகர் சிவகார்த்திகேயனை அவருடைய வீட்டில் சந்தித்து, திருமண பத்திரிக்கை கொடுத்துள்ளார். இதனால் சிவர்கார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் இவருடைய திருமண வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என்பது உறுதி.