சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ் அசோகன் இன்று அகால மரணம் அடைந்தார்.

பார்த்திபன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குண்டக்க மண்டக்க என்னும் படத்தை இயக்கியிருந்தவர் எஸ் அசோகன். இவர் தமிழச்சி, பொன்விழா உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 64 வயதாகும் எஸ் அசோகன் அவர்களுக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், பகவத் கீதன் என்ற மகனும் உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகளுக்கு...உயிரை பணையம் வைத்த கண்ணம்மா...உருகிப்போன பாரதி.. இன்றைய முழு எபிசோட் இதோ

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ் அசோகன் இன்று அகால மரணம் அடைந்தார். திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெருவில் இவரது இறுதி அஞ்சலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.