கும்பகோணத்திருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற  நேரம், அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பேச்சுலர் ஆக்ட்டர் ஆர்யாவுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கியிருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் உதவியுடன் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டுக்கு ஆர்யா செல்வதாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த சமயத்தில் அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

மேலும் ஆர்யா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்து ஷூட்டிங்குக்குப் புறப்படுவதாக இருந்த சமயத்தில் அவர்கள் தயாராகியிருந்த நேரத்தில் ஹோட்டலின் வாசலில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. என்னவென்று விசாரித்த படப்பிடிப்பு நிர்வாகத்தினர். இதனையடுத்து ஆர்யா மற்றும் படபிடிப்பு குழுவினரை ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என  தடுத்துவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் ஆர்யா கும்பகோணம் வந்திருக்கும் நோக்கத்தை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் ஹோட்டலின் வாசலில் ஆர்யாவை அந்த ஊரிலிருந்து வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பியபடி சத்தம்போட்டனர். இதனால்  நேற்று முழுவதும் திட்டமிட்டபடி அவர்களால் ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து, அனைத்துப் பொருள்களையும் பேக்கிங் செய்துகொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.