கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு 'ஜாகுவார்' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'சீதா ராமா கல்யாண' என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார்.  

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு 'ஜாகுவார்' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'சீதா ராமா கல்யாண' என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா ராம் நடித்திருந்தார். மேலும் பிரபல நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹரிஷா என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தை குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி தயாரித்தார்.

இந்நிலையில் இந்த படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கி உள்ளது. இதனால் இந்த சம்பவம் குறித்த படத்தின் தயாரிப்பாளர் அனிதா குமாரசாமி, போலீசில் புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரில் "சீதா ராமா கல்யாணம் படத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரித்தேன். ஏராளமான தொழிலாளர்களின் உழைப்பு இந்த படத்தில் இருக்கிறது. ஆனால் அதை திருடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். என்று என கூறியுள்ளார்.